»
S
I
D
E
B
A
R
«
SPM, STPM மாணவர்களே PRA U, IPTA, BIASISWA விண்ணப்பித்து விட்டீர்களா?
Mar 20th, 2010 by Yuthra

அன்பார்ந்த எசுபிஎம் (SPM) , எசுதிபிஎம்(STPM) மாணவர்களே,

தேர்வு முடிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இதோ கீழ்க்காணும் சுட்டிகள் (Links) உங்களுக்குப் பயனாக அமையலாம். உங்களின் சிறந்த எதிர்காலத்தை உடனடியாக தேர்வு செய்யுங்கள்.
1.STPM மாணவர்களுக்கான உயர்க்கல்விக் கழக விண்ணப்பம்:-
2.SPM மாணவர்களுக்கான உயர்க்கல்விக் கழக விண்ணப்பம்:-
3.உயர்க்கல்விக் கழக விண்ணப்ங்களுக்கான முக்கிய தேதிகள்:-
4.SPM மாணவர்களுக்கான ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்:-
5.கல்வி அமைச்சு – வெளிநாட்டுப் பல்கலைக்கழக் கூட்டுப் பயிற்சித் திட்டம்:-
6.பட்டத்திற்கு முந்தைய விளையாட்டுப் பள்ளி விண்ணப்பம்:-
7.தெலிகோம் மலேசியா கல்விக் கடனுதவி:-
8.பொதுச் சேவைத் துறை கல்விக் கடனுதவி:-
9.சைம் டார்பி நிறுவனக் கல்விக் கடனுதவி:-
10.தேசியப் பொருளகம் வழங்கும் கல்விக் கடனுதவி:-
11.பெட்ரோனாசு வழங்கும் கல்விக் கடனுதவி:-
12.தெனாகா நேசுனால் வழங்கும் கல்விக் கடனுதவி:-
13.சமூகக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்:-
14.வேலை வாய்ப்புகள்:-
நன்றி திருத்தமிழ்
HRP MEDIA STATEMENT (20/3/10) Anwar Ibrahim cutting ties with Hindraf or with critical Indian problems?
Mar 20th, 2010 by Yuthra
HRP MEDIA STATEMENT (20TH MARCH 2010)

Anwar Ibrahim cutting ties with Hindraf or with critical Indian problems?

In the Malaysian Insider newsreport yesterday (19th March 2010) which caught headlines in today’s Malaysia Nanban Tamil daily (MN 20th March 2010) Opposition Leader Anwar Ibrahim says Pakatan Rakyat cuts off ties
with Hindraf?  Because he does not know which Hindraf – Waytha, Uthaya, Thanindran or ASP Vasantha Kumar?

We could ask the same question – which PKR? Ezam, Zaharin, Chandra Muzaffar or Lokman Adam?

Anwar knows the real identity of the mysterious ASP Vasantha Kumar a Police Special Branch Operative in the E3M Division who with a mere 3 months stint in Hindraf was vide UMNOs’ print and electronic media declared a Hindraf leader on 13th December 2007 when the Inspector General of Police announced his “detention under the ISA” together with the other Hindraf lawyers.  It is common knowledge that this ASP’s job scope is to
create confusion, break up and destroy Hindraf under “Ops Padam Hindarf”.

But being an ex-UMNO stalwart of 17 years standing it is not suprising that Anwar uses this ASP Vasantha Kumar irrespective to “neutralize” Hindraf and HRP and as a diverting tactic away from the critical Indian issues which had also been abandoned by PKR, DAP and PAS in their two year rule in Selangor, Kedah and Penang

“I don’t want to be engaged in debate with Hindraf but with issues”, said Anwar.

We now challenge Anwar to get on to the real issues and not deal through his Indian mandores or promote mandorism ala UMNO in P.R.

“Anwar says that Hindraf uses a racist agenda”.  This is the 53 year old political rhetoric and gimmick used by UMNO that has led to the current critical Indian problems.  This “racist agenda” definition is only heard of in Malay-sia and nowhere else in the world.  Going by this Anwar’s “racist agenda” definition, South Africa would not have achieved independence and neither would black Barack Obama have become the President of the USA. But to the contrary there is no history of a Chinese or Indian becoming the President or Secretary General of PKR or PAS or a Malay or an Indian becoming the Secretary General of DAP racial and non racist PKR, DAP and PAS?

Putting aside (adding on to the UMNO created perception of) Hindraf being split and having lost the Indian support, Anwar must get to the point. PKR, PAS and DAP have full powers by virtue of Section 76 of the National
Land Code to grant land to all 98, 58 and 28 Tamil Schools all in one go by merely the stroke of the pens of the Menteri Besars of Selangor and Kedah and the Chief Minister of Penang respectively. If Anwar Ibrahim and
PR even refuses to do this because they may “lose Malay votes” and these Tamil schools are viewed as “profitable and lucrative” land banks to be exploited as and when necessary for their political party coffers then
they are not even going to address the scores of the other critical Indian problems. What difference are they going to make vis a vis the Indians, when they get to Putrajaya?

(Note: The tip of the iceberg of the critical Indian problems are highlighted on a day to day basis in our website
www.humanrightspartymalaysia.com.

“What do you want the State government to do Anwar asked, before adding that many problems were under the preview of the Federal government and out of PR’s hands”.  As the Malay proverb goes “sudah gaharu cendana pula, sudah tahu bertanya pula” is our reply.  Now the above is exactly what Anwar and P.R can do in their three PR rules states and which has nothing to do with the Federal Government.

It is a universally accepted norm that omission to fight against (UMNOs’) racism and silently watching the “blood letting” go by is tantamount to committing racism itself by PRK, DAP and PAS if not aiding and abetting the same.  Because P.R. refuses to address these critical Indian problems like UMNO, they too try diverting attention by saying that Hindraf and HRP are raising racial (Indian) issues.

Anwar Ibrahim and the P.R. leaders Hadi Awang and Lim Guan Eng have even refused to meet the Hindraf and HRP leaders to address the critical Indian problems in the three P.R. ruled states vis a vis their 84 MP’s on the
other national Indian issues. We have to end up championing Indian issues because for Anuar Ibrahim, P.R. and UMNO national issues seem to specifically exclude the Indian issues.

If only these supposed multi racial PKR, DAP and PAS had also addressed the critical Indian issues then 100,000 Indians would not have come out to the streets on the 25th November 2007 Hindraf Rally.  In fact Hindraf and HRP would long have been “out of a job” as PKR, DAP and PAS are “multi-racial” to have also championed the critical Malaysian Indian problems.

We will continue marching on irrespective with our Indian Political empowerment strategy – the way forward.  This strategy would empower the Indians to vote for themselves and accordingly represent themselves at the
highest political level vis a vis policy making and decision making levels as neither UMNO nor PR are going to champion or represent them.

Our next step is tomorrow in Johor Bahru ie the setting up of the General Elections 2012/2013 Operations Room (Bilek Gerakan) for DUN Ulu Tiram and Parliament Tebrau in Johor Bahru. Our critics have said this is not going to work.  To us even we did not think the 25th November 2007 Hindraf Rally would work. But it did.  So will this Indian Political Empowerment Strategy.  By the day we are inching in this direction.

Thank you.

Yours faithfully,

P. Uthayakumar

Secretary General (Pro-tem)
www.humanrightspartymalaysia.com
www.hrp-my.org

Pakatan cutting ties with Hindraf? (Malaysian Insider)
Hindraf members hold banners during a protest outside the PKR headquarters.

By Shannon Teoh

LONDON, March 19 — Citing its divisive nature and racist approach, Pakatan Rakyat (PR) leader Datuk Seri Anwar Ibrahim dismissed the influence of the Hindu Rights Action Force (Hindraf) over the Indian community.

“Which Hindraf? Waytha’s? Uthaya’s? Vasantha’s? Thanenthiran’s?” he said last night, in reference to the many splits in the movement said to be responsible for the huge swing of Indian voters away from the ruling Barisan Nasional coalition in Election 2008.

“I don’t want to be engaged in debate with Hindraf, but with the issues. What is PR’s weapon? Pluralism. If Hindraf wants to use a racist agenda to battle Umno’s racism, then it is not tenable,” the opposition leader explained.

Earlier this month, Hindraf founder P. Uthayakumar and 200 supporters protested against PR outside the PKR headquarters, signalling that Hindraf was withdrawing its support for the coalition that won five states in the
2008 elections.

In particular, it has claimed that the DAP-led Penang state government had not done enough for Indians, with the demolition of the largely Indian-populated Kampung Buah Pala the main sore point.

“Why abuse Lim Guan Eng?” Anwar said, referring to the Penang chief minister.

“He has done much more than BN. It may not be to the full satisfaction of Indians but what do you want the state government to do?” Anwar asked, before adding that many problems were under the purview of the federal
government and out of PR’s hands.

“Why not look at the things that have been implemented for all races, which include Indians as well.”

http://www.themalaysianinsider.com/index.php/malaysia/56765-pakatan-cutting-ties-with-hindraf

சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப்போல் வாழ்க்கை!
Mar 17th, 2010 by Yuthra


பாகம் 1

பாகம் 2

Wednesday, March 17, 2010

ஏழை இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாகத் திகழ்வது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை எனும் பிரச்சனைதான். சொந்த நாட்டிலேயே சுமார் ஒரு லட்சம் இந்திய மலேசியர்கள் கள்ளக்குடியேறிகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள் என புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் இப்பிரச்சனை தொடர்ச் சங்கிலியைப்போல் நீண்டுகொண்டே செல்கிறது.

அண்மையில் இண்ட்ராஃப் தலைமையிலான பிரித்தானிய மக்களவை கருத்தரங்கு நிகழ்வில், ஒரு தமிழர் குடும்பத்தின் அவல நிலையினை திரு.நரகன் பங்கேற்பாளர்களிடம் விளக்கிக்காட்டி, ஏழை இந்திய மலேசியர்கள் எவ்வாறு ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனை நன்கு படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பினாங்கில் கம்போங் பாகான் செராய், பெர்மாத்தாங் பாவோ எனுமிடத்தில் மிக வரிய நிலையில் வாழ்க்கையை ஓட்டிவரும் அக்குடும்பத்தினரின் நேர்க்காணலின் ஒரு பகுதி இதோ :-

தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி
Mar 17th, 2010 by Yuthra
செந்தமிழ் அந்தணர், தமிழ்க்கடல் ஐயா.இரா.இளங்குமரனார் மலேசியா, சிங்கை ஆகிய நாடுகளுக்குக் வருகை மேற்கொண்டிருந்தார். பல ஊர்களில் தமிழ் எழுச்சிப் பேருரைகள் நிகழ்த்தி தமிழ் உணர்வைச் செழிக்கச்செய்த்தார். அவ்வகையில், எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் ஐயா பேசிய உரைப்பொழிவு மலேசியாவின் முன்னணி நாளிதழ் ‘மக்கள் ஓசை’யில் செய்தியாக வெளிவந்துள்ளது. 16-3-2010இல் வெளிவந்த அந்தச் செய்தியின் முழுவடிவம் கீழே தரப்பட்டுள்ளது. - சுப.ந
***************************


பாரிட் புந்தார், மார்சு 16, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த்தாயை மீட்பதும் காப்பதும்தான் நமது முதல் வேலை.எழுத்துச் சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல நமது வேலை என்று மலேசியா வந்துள்ள தமிழகத் தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் புலவர் மதுரை இரா.இளங்குமரனார் கூறினார்.

தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அப்படி தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்தால் தமிழ்மொழி சிதைந்து சின்னாபின்னப்பட்டுப் போகும் என்று புலவர் பெருமகனார் நினைவுறுத்தினார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எனதுத் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறேன்.அவளை சோதனை செய்த அந்த மருத்துவர் எனது தாயின் உயிரை மீட்பதில் கவனம் செலுத்தாமல்.என் தாயின் கை வலைந்திருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் என்கிறார்.

என்தாயின் உயிரை முதலில் மீட்டுத்தாருங்கள்.அவள் கையை சரி செய்வதா காலை சரி செய்வதா என்பது பற்றி பின்னர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அந்த மருத்துவருக்கு நான் பதிலளிக்கிறேன்.நான் மட்டுமல்ல தாயின் மீது பற்று கொண்ட எந்த மகனும் அதைத்தான் செய்வான்.

அப்படித்தான் இன்று தமிழ்த்தாய் உயிர் மீட்புக்கும் வாழ்வுக்கும் செய்ய வேண்டிய பற்பல பணிகள் அப்படியே செயல் முடங்கிக் கிடக்கும் போது சிலர் தங்களின் தன்னலத்திற்காக எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ் எழுத்துக்களை சிதைக்க முற்படுகிறார்கள் என்று புலவர் இளங்குமரனார் எடுத்துரைத்தார்.

இங்கு பேரா மாநில தமிழியல் ஆய்வுக் களம், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க, இணை ஏற்பாட்டில் பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற “தமிழரின் எழுச்சியும் வீழ்ச்சியும் ” என்ற தலைப்பிலான பொழிவு நிகழ்ச்சியில் செந்தமிழ் அந்தணர் மேற்கண்ட செய்தியை வலியுறுத்தினார்.

தற்போது தமிழ்நாட்டில் சிலர் தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய முனைந் திருக்கிறார்கள். அதன்படி இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்க வேலை செய்கிறார்கள்.

இது தமிழுக்கு எழுச்சியூட்டும் செயலல்ல. மாறாக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் செயலாகும்இந்தச் சீர்த்திருத்தால் தமிழ்மொழி பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும். நாளடைவில் தமிழ் சிதைந்துபோய் காலத்தால் அழிந்துபோகும் என்று புலவர் இரா.இளங்குமரனார் குறிப்பிட்டார்.

தமிழில் சீர்மை உண்டாகும், தமிழை எளிமையாகவும் விரைவாகவும் கற்கலாம் என்று எழுத்துச் சீர்த்திருத்தம் செய்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிறிதுகூட உண்மையில்லை. இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவமே படிப்பதற்கும் எழுதுவதற்கும் எளிதானது.

கருவிலிருககும் குழந்தைக்கே ஆங்கில வழி பள்ளியில் இடம் கிடைக்க முன்பதிவு செய்யும் அளவிற்கு தமிழ்ப் பெற்றோர்களின் மனநிலையை இன்று உருவாகி இருக்கிறது.தமிழ் வழி கல்வி என்பதும்,தமிழ் கற்றால்தான் வேலை என்பதும் பற்றி தமிழ்ப்பெற்றோர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

அத்தகைய சூழ்நிலையில் தமிழ்த்தாய் குற்றுயிரும் குலை உயிருமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது சிலர் சீர்மை என்ற பெயரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள தமிழ் மாநாடு ஒன்றில் பரிந்துரைக்கப் போகும் இது போன்ற திட்டங்கள் தமிழை அழிக்கவும் சிதைக்கவும் மட்டுமே பயன்படும் என்று புலவர் பெருமகனார் எச்சரித்தார்.

அதுமட்டுமல்லாது, இப்போது நடப்பில் இருக்கும் எழுத்துகள் மிகவும் சிறந்த கட்டமைப்பைக் கொண்டது. வடமிருந்து இடப்பக்கமாக எழுதும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், சீர்த்திருத்தம் செய்யப்படும் உகர எழுத்து குறியீடுகளை தமிழ் எழுத்து மரபுக்கு மாறாக இடமிருந்து வலமாக எழுத வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படிப்பட்ட மாற்றங்கள் கண்டிப்பாகத் தமிழைச் சிதைந்த மொழியாக ஆக்கிவிடும்.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர் கட்டிக்காத்த – தமிழருக்குச் சொந்தமான மரபுகள் பல உண்டு. எழுத்து மரபு அதில் ஒன்று. மரபு கெட்டுப்போனால் தமிழ் மொழியும் தமிழ் இனமும் அடையாளம் இழந்துபோகும். மரபு திரிபின் பிறிது பிறிதாகும் என்று தொல்காப்பியம் கூறுவதை நினைவில் நிறுத்து நம்முடைய மரபுகளை அழியவிடாமல் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும் என்றவர் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர் தமிழ் எழுத்துகள் குறித்த வரலாற்றுப் பின்னணிகளையும் தமிழ் எழுத்துகளை எழுதும் முறைகளில் இருக்கும் மனவியல் அணுகுமுறைகளையும் எழுத்துகளை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். தமிழில் எ, ஏ, ஒ, ஓ ஆகிய நான்கு எழுத்துகள் வீரமாமுனிவரால் சீர்த்திருத்தம் செய்யப்பெற்றது. அது மிகவும் சிறிய மாற்றம்தான்.

பிறகு, பகுத்தறிவு பகலவன் பெரியார் சில எழுத்துச் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.அவையும் ஏற்கனவே கல்வெட்டில் இருந்தவைதான்.பின்னர் ஓலைச்சுவடி வந்த போது பெரியார் பரிந்துரைக்கு முந்திய எழுத்துக்கள் இருந்தன.

அச்சுப்பணிகளையும் தட்டச்சுக்களையும் காரணம் காட்டி பெரியார் மீண்டும் பழைய எழுத்துககளையே முன் மொழிந்தார். அதனைத் தமிழறிஞர்கள் எதிர்த்தனர். இருந்தாலும், பிறகு பதின்மூன்று எழுத்துகளை மட்டும் சீர்த்திருத்தம் செய்தார்கள். இது தமிழ் எழுத்து வடிவங்களை மாற்றி அமைத்தாலும் பெரிய பாதகம் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால், இப்போது சிலர் மேற்கொண்டுள்ள எழுத்துச் சீர்த்திருத்தம் மிகவும் பாதகமானது. தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை முற்றிலுமாகச் சீரழிந்து போகும். தமிழின் அடையாளம் அற்றுப்போகும். ஆகவே இந்தப் புதிய எழுத்துச் சீர்த்திருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் இந்தச் சீர்த்திருத்ததைச் செய்ய முயலும் முனைவருக்கு தாம் கைப்பட கடிதம் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்து தனி நூல் ஒன்றை எழுதி முடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட என்பத்தொரு அகவையை அடைந்துள்ள புலவர் ஐயா இளங்குமரனார் வள்ளுவத்தை வாழ்விக்க வந்த தமிழ்ச்சான்றோராக விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்திருப்பவர்.

தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ் வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

இதே நிகழ்ச்சியில் புலவர் இரா.இளங்குமரானார் முன்னிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு அமைப்புக்களான பேரா தமிழியல் ஆய்வுக் களம்,பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க பொறுப்பாளர்கள் ஏற்கனவே செய்திருந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் புதிதாக பரிந்துரைக்கப்படவுள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்தற்கு கண்டனம் தெரிவித்தனர்.

வந்திருந்த பொது அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தமிழ்ப் பெருமக்களும் முன்னிலையில் அவை அறிவிக்கப்பட்டு,அனைவரும் ஒன்றிணைந்து இந்த எழுத்துச் சீர்த்திருத்தத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு அடையாளமாக எழுத்துச் சீர்த்திருத்தத்தால் தமிழுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாக சுப.சற்குணன் தொகுத்திருந்த இணையத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று புலவர் இரா.இளங்குமரனாரிடம் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வமும் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் ஒப்படைத்தனர்.

Jakim and the religious extremist UMNO government denies Hindu wife her 22 month old baby
Mar 17th, 2010 by Yuthra

Posted on 16 March 2010

Jakim and the religious extremist UMNO government denies Hindu wife her 22 month old baby

Last year the IPOH High Court gave an interim order for the muslim convert father to surrender Indra Ghandi’s 22 month old daughter to her. But the muslim husband fully backed up by the Islamic authorities Jakim and the UMNO controlled government machinery refused to revert the baby to her mother. And today 12/3/2010 the mother was on a rare occasion in Malaysia given custody of her said child but this same muslim husband, Jakim, and UMNO authorities are still refusing to hand over the baby to her natural mother. (refer NST 12/3/2010 at page 2, and The Star 12/3/2010 at page N2). Why? Height of religious extremism by UMNO in the face of Article 11 of the Federal Constitution which guarantees freesom of religion.

P.Uthayakumar

ஹிண்ட்ராப் ஆதரவை இழந்துவிட்ட மக்கள் கூட்டணிக்கு மீண்டும் வெற்றி கிட்டுமா?
Mar 15th, 2010 by Yuthra

Posted on 15 March 2010

123

பிரித்தானிய மக்களவையில் இண்ட்ராஃப்
Mar 15th, 2010 by Yuthra

பிரித்தானிய மக்களவையில் மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்தான இண்ட்ராஃபின் விளக்கக்கூட்டம்.

10/03/10 திகதியன்று லண்டனில் பிரித்தானிய மக்களவை உறுப்பினர் திரு.வீரேந்திர சர்மாவின் துணையோடு இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி, இண்ட்ராஃப்பின் தேசிய ஆலோசகர் திரு. என்.கணேசன் ஒரு விளக்கக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பூர்வீகக் குடினருக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கூட்டத்தில் திரு.கணேசன் மற்றும் திரு.வேதமூர்த்தியால் விளக்கப்பட்டது. தொடர்ந்து அம்னோ அரசாங்கத்தின்கீழ் நிகழ்ந்துவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து அனைத்துலக ரீதியில் அதற்கான தீர்வினை விவாதிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இவ்விளக்ககூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

மலேசியா மக்கள் சக்தி கட்சி ஆதிக்கம் எதுவரை?
Mar 15th, 2010 by Yuthra

மலேசியா மக்கள் சக்தி கட்சி ஒற்றுமை இழந்து, வலுவிழந்து உள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மையே. மேல் மட்ட தலைவர்கள் பதவி போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள் மேலும் சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளார்கள் என்பதும் உண்மையே. இந்த பதவி போராட்டத்தினால் கீழ் மட்ட தலைவர்களும் தொண்டர்களும் மற்றும் பொது மக்களும் வெகு அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று மலேசியா மக்கள் சக்தி கட்சி இளஞர் அணி கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இந்த நிலைமை நீடித்தால் இக்கட்சி தடம் தெரியாமல் போய்விடும் என்பது திண்ணம் என்று இந்த அணியினர் நம்புகின்றனர் . அகவே மேல் மட்ட தலைவர்கள் குறிப்பாக தனேந்திரன் மற்றும் வேதமூர்த்தி இருவரும் மக்கள் நலம் கருதி சுமூகமான முடிவு எடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றனர் இவ்வணி. ஒற்றுமையே பலம் இல்லையேல் நாசம் நிட்சயம் உண்டு இக்கட்சிக்கு என்கின்றார் தேசிய இளஞர் அணி தலைவர் திரு நா ராமு.

DSC00203.JPG
திருந்தாப் பிறவியா தி.எச்.ஆர் ராகா?
Mar 14th, 2010 by Yuthra

மலேசியத் தனியார் தமிழ் வானொலி தி.எச்.ஆர் ராகா அண்மையில் அதன் அடையாள இசையையும் அடைமொழியையும் ‘செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு’ (Semma Hottu Semma Hittu) என்று மாற்றிவிட்டது. இதனால், அவ்வானொலி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் குறிப்பாகத் தமிழ்ப் பற்றாளர்களின் வன்மையான கண்டனத்திற்கு உள்ளானது.

பினாங்குப் பயனீட்டாளர் சங்கம், பொது இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், இளைஞர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த வேளையில் காவல்துறையில் புகாரும் செய்யப்பட்டிருந்தது.

இதன் தொடர்பில், ஆகக் கடைசியாக கடந்த 12-3-2010இல் கோலாலம்பூரில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில் பல இயக்கங்கள் ஒன்றுகூடி அந்தத் தனியார் வானொலியின் தமிழ் சீரழிப்பு வேலையைக் கண்டிக்கும் வகையில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பேரவையின் தலைவர் இராஜரத்தினம் தலைமையேற்று ராகா வானொலி தமிழ்மொழியைச் சிதைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் கடும் கண்டனத்திற்கு உள்ளான சில விடயங்கள்:-

1)அறிவிப்பாளர்கள் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

2)நேயர்களிடம் இரட்டை பொருள்தரும் வகையில் பேசக்கூடாது.

3)செம்ம ஓட்டு செம்ம ஈட்டு என்ற அடைமொழியை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

4)தமிழைச் சிதைத்தும் சின்னபின்னப்படுத்தியும் வேடிக்கை காட்டும் வேலையைக் கைவிட வேண்டும்.

5)மலேசியத் தமிழர்கள் நல்ல தமிழில் பேசுபவர்கள்; பண்பாக நடப்பவர்கள் என்று ஒரு மரபு இருக்கிறது. ராகா வானொலி இந்த மரபைக் கெடுக்கக் கூடாது.

6)ஆயிரக் கணக்கான நேயர்கள் செவிமடுக்கும் வானொலியில் கொச்சை மொழியில் பேசுவதும் நிகழ்ச்சியை வழிநடத்துவதும் ஏற்புடையதல்ல.

7)பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் பேசுவதும், இது எப்படி இருக்கு என்ற நிகழ்ச்சி வழி மனங்களைப் புண்படுத்துவதும் கூடாது.

8) ”ரிங் அடிச்சா ரிங்கிட்” என்பது போல கலப்பு மொழியில் நிகழ்ச்சி தலைப்புகள் வைக்கப்படுவது மொழியை அழிக்கும் வேலையாகும்.

9)பொழுது போக்குதான் வாழ்க்கை என்பது போலவும், ‘எஞ்சோய்லா’ (Enjoy-lah) என்று கூறி சினிமாதான் இளையோர்களின் வாழ்க்கைமுறை என்பது போலவும் தோற்றத்தை ஏற்படுத்தி மாணவர்களையும் இளையோர்களையும் கெடுக்கும் போக்கைக் கைவிட வேண்டும்.

10)வானொலி நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக, புதுமையாக, சமூக வளர்ச்சிக்கு நல்லதாக இருக்க வேண்டுமே தவிர மொழியை அழிப்பதாக இருக்கக் கூடாது.

எவ்வளவுதான் தனிமனித உரிமைக்கு நாம் இடம் கொடுத்தாலும், சமுதாயத்திற்கு என்று உரிமை இல்லையா. அதனைத்தான் நாம் பொது ஒழுக்கம் என்கிறோம். ஆயிரக்கணக்கான நேயர்களிடம் பேசும் பொழுது அவர்களை மதிக்கும் வண்ணம் பேசுவது இயல்பு அதனைவிட்டு மது பான விடுதியில் (Pub culture) பேசுவது போல் நிகழ்ச்சியை நடத்துவது எவ்வகையில் சரியாகும். இதனைதான் சமூகம் விரும்புகிறது என்றால், அவ்வளவு மோசமான சமூகமா நமது சமூகம்? என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், கூட்டத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

எத்தனை இயக்கங்கள் கண்டன குரல்களை எழுப்பியும், இவர்கள் கண்டுகொள்வதில்லை. தமிழால் உயர்ந்து தமிழை இழிவுபடுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது, அதுமட்டுமன்றி மறுப்பு அறிக்கை வேறு. ஆங்கிலம் பேசுகின்ற நேயர்களை இழுக்கின்றார்களாம்! என்னையா வேடிக்கை இது ? ஆங்கிலம் பேசுகின்ற நேயர்களுக்காக தமிழை கொலை பண்ணலாமா ? ஆங்கில நேயர்களை இழுக்க வேண்டுமானால் ஆங்கிலத்தில் வானொலி நடத்திவிட்டுச் செல்லலாமே! ஏன் தமிழ்மொழியச் சிதைக்க வேண்டும்? எந்த மொழியாக இருந்தாலும் தூய்மையாகப் பேசுவதுதானே முறை!
அறிவுமயமான இந்திய சமூகத்தை உணர்ச்சிமயமான சிந்தனைகளில் மூழ்கடித்து, பொழுது போக்கு என்ற பெயரில் சமூகத்தை சீரழிப்பதை எந்த ஒரு மானமுள்ள மலேசியத் தமிழன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்.

இவ்வளவு பெருமை வாய்ந்த நம் மொழியை அறிந்தும் அறியாதது போல் மொழியை சிதைத்து, பண்பாட்டை கெடுத்து இளைய தலைமுறையினருக்கு தவறுதலாக வழகாட்டும் இவர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது.
“மொழி என்பது நமது மான ஆடை, அதில் ஓட்டை விழுந்தால் நமக்குதான் அவமானம்.”

இவ்வளவும் நடந்த பிறகு, சமுதாயப் பொறுப்பையும் தமிழ்மொழி நலனையும் கருதிற்கொண்டு தி.எச்.ஆர் ராகா வானொலி என்ன செய்திருக்க வேண்டும்?
தான் தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்ட அத்துணை தவறுகளுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிப்பதோடு எல்லாத் தவறுகளையும் படிப்படியாகத் திருத்திக்கொள்வதாகக் கூறியிருக்க வேண்டும்; திருந்தியிருக்க வேண்டும்!
ஆனால் நடந்தது என்ன? செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு என்ற அடைமொழிக்குத் தற்காலிகமான நிறுத்தம் மட்டும்தான். இதனை அந்த வானொலியின் தலைமை நிருவாக அதிகாரி இரமேசு கூறியுள்ளார்.

திருந்தாப் பிறவியா இந்தத் தி.எச்.ஆர்.ராகா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
இது பற்றி அவர்கள் கருத்து கணிப்பு செய்கிறார்களாம்! அதன் முடிவுபடிதான் அடுத்த நடவடிக்கை எடுப்பார்களாம்!
இவர்கள் நடத்தவிருக்கும் இந்தக் கருத்துக் கணிப்பு உண்மையாக இருக்குமா? எங்கே? எப்போது? யாரிடம்? இவர்கள் கருத்து கேட்கப் போகிறார்கள்? அவர்களுடைய கருத்துக் கணிப்பு வெளிப்படையானதாக இருக்குமா?
சமுதாய நலனைவிட; தமிழ்மொழி நலனைவிட; இளையோர் நலனைவிட; மாணவர்கள் நலனைவிட இவர்களுக்கு வர்த்தக வளர்ச்சிதான் முக்கியம்! வணிக நலன்தான் முக்கியம்! பணம்தான் முக்கியம்! காசுதான் முக்கியம்! என்றால்…
உண்மையிலேயே.. திருந்தாப் பிறவிதான் தி.எச்.ஆர்.ராகா!!! என்ற முடிவை நாம் கட்டாயம் எடுக்கவேண்டும்: கூடவே அந்த வானொலியை முடக்கிப்போட வேண்டும்.

பி.கு:- ஒரு குறிப்பிட்ட நாளிதழ் தி.எச்.ஆர் ராகாவுக்கு ஊதுகுழலாகச் செயல்படுவதுபோல தெரிகிறது. இதனைப் பற்றி நன்கு ஆராய்ந்த பிறகு அந்த நாளிதழுக்கு ஆப்பு அடிப்பதைப் பற்றி சிந்திப்போம்

நன்றி திருத்தமிழ்

நித்தியானந்தா: மற்றோர் அவமானம்!
Mar 12th, 2010 by Yuthra

ஆறு. நாகப்பன்

SriNithyanandaSwami 1 காவி அணிந்த இளம் துறவி நித்தியானந்தா கடைசியில் தானும் ஒரு போலிதான் என்று நிரூபித்துவிட்டார்!

வாழுங் கலை கற்பித்த இவர் ஓர் உண்மைத் துறவியாக வாழுங் கலையைக் கற்றுக் கொள்ளாமல் உலக இந்துக்களுக்கு மற்றுமோர் அவமானச் சின்னமாக நிலைத்துவிட்டார்.

திரைப்பட நடிகை ஒருத்தியோடு இவர் இருந்த அந்தரங்கக் காட்சிகள் இன்று அகில உலகக் காட்சிகளாகிவிட்டன.

இந்தியாவில் பல பெரிய நகரங்களிலும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட  உலகின் பல நாடுகளில் நித்தியானத்தாவுக்குக் கிளைகள் உள்ளன.

இவரும் இவரைப் போன்ற சாமியார்கள் பலரும் இலட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்டுள்ளனர். பக்தர்களால் இவர்களுக்குப் பணமும் புகழும் வருகின்றன. உடனே பத்திரிகைகளின் பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பு-கிறது. இவரைப் பற்றி எழுதினால் பத்திரிகை விற்பனையைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற ஆசையில் இவர்கள் எழுதுவதாகப் பத்திரிகை ஆசிரியர்களே இவர்களின் பெயர்களில் கட்டுரைகள் எழுதுகின்றனர்  தமிழ் -நாட்டில்!

Swami_Nithyananda 2 இப்படித்தான் பல சாமியார்களைப் பக்தர்களும் பத்திரிகைகளும் வளர்த்-திருக்கின்றன. மலேசியாவிலும் இப்படித்தான் சாமியார்களைப் பத்திரிகைகள் வளர்க்கின்றன. பத்திரிகைகளைச் சாமியார்கள் வளர்க்கின்றனர்.  மக்களை முட்டாள்களாக்கிச் சப்பாணிகளாக்குவதில்  இவர்களின் கூட்டுக் கொள்ளை இது.

கடந்து போன சில ஆண்டுகள் அவ்வப்போது இப்படிப்பட்ட போலிகளை நமக்கு அடையாளம் காட்டிவிட்டுப் போயிருக்கின்றன. அடுத்து வரும் ஆண்டுகள் இன்னும் என்னென்ன காட்சிகளைக் கொண்டு வருமோ என்ற அச்சமும் இப்போது ஏற்பட்டுள்ளது.

சுவாமிஜி, குருஜி, யோகி, சித்தர், ஞானி என்ற அடைமொழிகளோடு கடந்த இருபது ஆண்டுகளில் பல போலிகள் தோலுரிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எங்கிருந்து வருகின்றனர்?

இந்துக்களின் அறியாமை என்னும் அழுக்கிலிருந்து தோன்றும் புழுக்களே இவர்கள்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழி விழுமாறே (திருமந்திரம் 1658)

என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் கூறினார்.  இந்துக்கள், குறிப்பாகத் தமிழர் தமிழில் இருக்கும் சமய நூல்களைக் கூடப் படிப்பதில்லை. படித்தவர் சொல்வதைக் கேட்பதில்லை. மன அமைதி, பணம், பதவி இப்படி எதுவானாலும் குறுக்கு வழியில் உடனடியாகக் கிடைக்க வேண்டும்  என்ற ஆசையில் ஆசை விமோசனத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட சாமியார்கள் கச்சிதமாகத் தீட்டப்பட்ட திட்டங்களோடு வெளிப்படுகிறார்கள்.

காவி, உருத்திராக்கம், திருநீறு, நீண்ட முடி அல்லது தாடி இவற்றோடு புற வேடம் தயாராகிறது. தங்களிடம் உள்ள ‘அற்புத சக்திகள்’ பற்றிப் போற்றிப் புகழ்ந்து பேசுவதற்கு சிலரைச் சுற்றி வைத்துக் கொள்கின்றனர். பக்தர்களை உருவாக்குவதில் பல நவீன வியாபார உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காகவே இந்தத் துறைகளில் கல்வி கற்ற புலிகள் பலர் இவர்களுக்குப் பின்னால் பணியாற்றுகின்றனர்.

இவர்களை விளம்பரம் செய்வதற்குப் பயிற்சி பெற்ற புகைப்படக் கலைஞர்களும் விளம்பர நிறுவனங்களும் இவர்களின் பின்னணியில் இயங்குகின்றனர்.

nithyananda 3 வாழ்க்கையில் வந்து போகும் மனோவியல் பிரச்சனைகளைச் சொந்தமாகக் கையாளத் தெரியாத சாமானியர்கள்தாம் இவர்களின் வாடிக்கையாளர்கள். எந்தப் பிரச்சனையும் தீராமலேயே தீர்ந்துவிட்டதைப் போன்ற உணர்வை இந்தச் சாமியார்கள் தங்கள் வாடிக்கையாளர்க்கு உருவாக்கிவிடுகின்றனர். ஏதோ ஒரு சாந்தி கிடைத்துவிட்டதைப் போல் உணர்ந்தவர்கள் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டுகிறார்கள். ஆசிரமம் கட்டப் போவதாகச் சொல்லியே பல கோடிகள் சேர்க்கப்படுகின்றன.

சில சாமியார்கள் உண்மையிலேயே ஆசிரமம், கல்லூரி, மருத்துவ மனை என்று சமூக சேவைகளையும் வழங்குகின்றனர்.  சேவையாகவும் அதே சமயத்தில் சாமியார்களுக்கு விளம்பரமாகவும் இந்த நிறுவனங்கள் அமைந்து விடுகின்றன.

இப்படி எதுவும் இல்லாமல் கட்டுக் கட்டாகப் பணத்தை மட்டும் வசூலித்து மாட மாளிகைகளில் உல்லாசமாக வாழ்கிற சாமியார்களும் உள்ளனர். இது இவர்களின் பக்தர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கின்றனர் என்பதைப் பொருத்துள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு மலேசியாவில் நல்ல சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன.

பணமும் புகழும் பாதுகாப்பும் வந்துவிட்டால் சாமியார்களுக்குத் துணிவும் வந்துவிடுகிறது. அதனால் இவர்கள் செய்யும் திருவிளையாடல்களையே இந்த நித்தியானந்தாவும் செய்திருக்கிறார்.

இவர்களிடமிருந்து தப்புவதற்கு இந்துக்கள் என்ன செய்ய வேண்டும்?

சுவாஜி, குருஜி, யோகி, சித்தர் என்று இன்று எவரும் இல்லை. எனவே அவரவர் சமய நூல்களை ஆழ்ந்து பயின்று இறைவனை நோக்கி  நேரடியாகப் பக்தி செய்ய வேண்டும். கோயில் வழிபாட்டிலும்  நிபந்தனை-யற்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும்.  இதனால் உண்மையான மன அமைதி ஏற்படும். எவரிடத்தும் ஏமாற வேண்டியிருக்காது. காசு பணத்திற்கும் அழிவில்லை

»  Substance: WordPress   »  Style: Ahren Ahimsa